ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி மதியம் நடைபெறும் என்று அறிவிப்பு..!

Ram Lalla consecration: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி மதியம் நடைபெறும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

Ram Lalla consecration
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 1, 2024, 10:20 PM IST

அயோத்தி (உத்தரபிரதேசம்): உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் மிகத்தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சி குறித்த விவரங்களைத் தெரிவித்த ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ஜனவரி 22 ஆம் தேதி மதியம் கும்பாபிஷேகம் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அழைப்பாளர்களுக்கான ஏற்பாடுகளை ராமர் கோயில் அறக்கட்டளை செய்து வருகிறது. கும்பாபிஷேக விழாவிற்குப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதுமட்டும் அல்லாது காங்கிரஸ் கட்சித் தரப்பில் இருந்து, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற கட்சியின் தலைவர்களுக்கும் கோவில் அறக்கட்டளை, அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத் ராய், "ஜனவரி 22ஆம் தேதி மதியம் 12:20 மணிக்கு ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) நடந்த பிறகு, ஆரத்தி செய்து பிரசாதம் வழங்கப்படும். இந்த பிரசாதம் உள்ளூரில் உள்ள எல்லா இடங்களிலும் மற்றும் சந்தைகளிலும் விநியோகிக்கப்படும்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் குறிக்கும் வகையில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு விளக்குகளை ஏற்றி, தங்கள் இருப்பிடங்களில் இருந்து பிரார்த்தனை செய்யுமாறு உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்குப் பிரதமர் மோடி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் சார்பில் ராம் லல்லா சிலையை ஜனவரி 22ஆம் தேதி பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் மிகத்தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2024 நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரஸ் அறிக்கையில் இடம் பெற உள்ள முக்கிய விபரங்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.