ETV Bharat / bharat

ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்; உத்தரபிரதேச இளைஞரை கைது செய்த ஹைதராபாத் போலீஸ்

author img

By

Published : Jun 23, 2023, 2:20 PM IST

ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு சமூக வளைதளம் மூலம் ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்த உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்
ஆன்லைனில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் மெசேஜ் அனுப்பி ஆன்லைனில் தொந்தரவு செய்துவந்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபரை ஹைதரபாத் ரச்சகொண்டா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ரச்சகொண்டா குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் (DCP) அனுராதா மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் (ACP) வெங்கடேஸ்வரலு நரேந்திர கவுட் ஆகியோர் கூறுகையில், “பேஸ்புக்கில் அப்பெண்ணிற்கு அறிமுகமான நபர் அவரது செல்போனை ஹேக் செய்து, அதில் இருந்து அவரது தனிப்பட்ட புகைப்படங்களை சேகரித்து, ஆபாசமான பதிவுகள் மற்றும் மெசேஜ் மூலம் அப்பெண்ணை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான மோகித் பிரதாப் சிங் குஷ்வாஹா கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்” என தெரிவித்தனர்.

தொடர்ந்து இது குறித்து டிசிபி அனுராதா கூறுகையில், “மோகித் பிரதாப் சிங் குஷ்வாஹா பி.பார்மசி முடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், தெலங்கானாவில் உள்ள மேட்சல் மாவட்டத்தின் வசிக்கும் பெண்ணிற்கு ஆர்யன் குஷ் என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கு மூலம் இவர் அறிமுகமாகி உள்ளார். அப்பெண் முன்பு உத்தர பிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து உள்ளார். அதை அறிந்த அந்த இளைஞர் அவரும் அங்கு தான் படித்ததாக கூறி அப்பெண்ணிடம் பழகத் தொடங்கியுள்ளார்.

யூடியூப் மூலம் செல்போன்களை ஹேக் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்ட மோகித் பிரதாப் சிங் குஷ்வாஹா பின்னர் அப்பெண்ணின் செல்போனை ஹேக் செய்து உள்ளார். பின்னர் அந்த செல்போனில் இருந்து பெண்ணின் தனிப்பட்ட புகைப்படங்கள், செல்போன் எண்களை சேகரித்துள்ளார். தொடர்ந்து, அப்பெண்ணை வீடியோ காலில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் அப்பெண் தொடர்ந்து தன்னுடன் பேசாவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக மோகித் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி உள்ளார். மோகித் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுவது, பிளேடால் கையை வெட்டிக் கொள்வது போன்ற வீடியோக்களை எடுத்து அப்பெண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

மோகித்தின் செயலால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அப்பெண் ஒரு கட்டத்தில் அவரை சமூக வளைதளங்களில் ப்ளாக் செய்துள்ளார். ஆனால் அதையும் மீறி மோகித் அப்பெண்ணிற்கு ஆபாசமான படங்களை அனுப்பு துன்புறுத்தி உள்ளார். மேலும் அப்பெண்ணின் பெயரில் மோகித் ஒரு போலியான பேஸ்புக் கணக்கையும் தொடங்கி உள்ளார். தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மே முதல் வாரத்தில், பாதிக்கப்பட்ட பெண் ரச்சகொண்டா சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். விசாரணையில், மோகித் உத்தர பிரதேசத்தில் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து மூத்த காவல் ஆய்வாளர் பரமேஷ்வர் தலைமையிலான குழு உத்தர பிரதேசம் சென்று அவரை கைது செய்தது. பின்னர் அங்கிருந்து டிரான்ஸ்சிட் வாரண்ட் மூலம் மோகித்தை ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: Pocso: 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 64 வயது முதியவருக்கு 95 ஆண்டுகள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.