ETV Bharat / bharat

தோழியுடன் உடலுறவு கொள்ள மறுத்த காதலன் பிறப்புறுப்பை வெட்டிய காதலி! - கான்பூர்

Kanpur shocker: உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே தோழியுடன் உடலுறவில் ஈடுபட மறுத்த காதலனின் பிறப்புறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

uttar pradesh girlfriend cuts boyfriends private part for refusing physical relationship with her friend
தோழியுடன் உடலுறவு கொள்ள மறுத்த காதலன் பிறப்புறுப்பை வெட்டிய காதலி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 11:02 PM IST

கான்பூர் (உத்தரப்பிரதேசம்): உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள சௌபேபூர் பகுதியில் நடந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சௌபேபூர் பகுதி அருகே பெண் ஒருவர் அவரது காதலனை வீட்டிற்கு வரவழைத்து, அவரது தோழியுடன் உடலுறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அந்த காதலன் மறுத்ததால், அந்தப் பெண் அவரது காதலனின் பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். சௌபேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்த இளைஞர் அவரது காதலியை சந்திக்க இரவில் காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது காதலி தன் தோழியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது அந்தப் பெண் அவரது காதலனை தனது தோழியுடன் உடலுறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அப்பெண் தனது காதலனின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து, வலியால் துடித்த அந்த இளைஞரின் பயங்கரமான அலறல் சத்தத்தைக் கேட்டு கிராம மக்கள் பலரும் அங்கு திரண்டனர். இதை அடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடி உள்ளார்” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், “பெண்ணின் காதலன் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்த சம்பவத்திற்கு பின்னர் வீட்டிற்கு சென்ற இளைஞர் நடந்த சம்பவத்தை அவரது மனைவியிடம் கூறியுள்ளார். பின்னர் இளைஞரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவரது மனைவி எங்களுக்கு (போலீசாருக்கு) தகவல் தெரிவித்தார்.

இந்த தகவலை அடுத்து, நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரை மீட்டு முதலுதவிக்காக சௌபேபூர் சுகாதார மையத்தில் அனுமதித்தோம். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்” என காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: நகைக்கடையில் துளைபோட்டு ரூ.25 கோடி மதிப்பிலான நகை திருட்டு - டெல்லியில் பயங்கரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.