உத்தரப்பிரதேசம் மவு மாவட்டத்தைச் சேர்ந்தவர், கவுரவ் சவுத்ரி. காவலரான கவுரவ் சவுத்ரி, இந்தியா- நேபாளம் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், கவுரவ் சவுத்ரி விடுமுறை கேட்டு, தன் உயரதிகாரிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.
கடிதத்தில் கவுரவ் சவுத்ரி, அண்மையில் திருமணம் முடிந்து பணியில் சேர்ந்ததாகவும், ஜனவரி 10ஆம் தேதி தனது மருமகனின் பிறந்த நாளுக்கு ஊருக்கு திரும்பி வருவதாக மனைவியிடம் முன்னதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், தற்போது ஊருக்கு வர முடியாத சூழல் நிலவுவதாக மனைவியிடம் தெரிவித்தது முதல் தனது செல்போன் அழைப்புகளை எடுக்க மறுப்பதாக கடிதத்தில் காவலர் கூறியுள்ளார்.
7 நாட்கள் விடுமுறை கோரி காவலர் கவுரவ் சவுத்ரி கடிதம் எழுதியிருந்த நிலையில், 5 நாட்களுக்கு உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். உயரதிகாரிக்கு காவலர் எழுதிய விடுமுறை கடிதம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ICICI Bank Case: சந்தா கோச்சர், தீபக் கோச்சருக்கு ஜாமீன் - மும்பை உயர் நீதிமன்றம்