பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தனது கணவர் தன்னை மனரீதியாக துன்புறுத்துகிறார். ரூ. 60 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிவிட்டார். அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணையின்போது, கணவர் தரப்பிலிருந்து, மனரீதியாக துன்புறுத்த எண்ணவில்லை.
தொழில்தொடங்கியதில் பண நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. இதனால், அவர் விவாகரத்து கோருகிறார் என்று வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி வழக்கை ரத்து செய்தார். இதனால் அந்த பெண் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணையில் பெண் தரப்பில், 1991ஆம் ஆண்டு எங்களுக்கு திருமணமாகியது. இதையடுத்து எனது கணவர் தொழில் தொடங்குவதாக கூறி அதிகளவில் கடன் வாங்கினார். இந்த கடனை கட்ட முடியவில்லை.
இதனால் நான் வங்கியில் கடன் பெற்று அவருக்கு கொடுத்து வந்தேன். அப்படி ரூ.60 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளேன். ஒருகட்டத்தில் இந்த பணத்தையெல்லாம் அவர் தேவையில்லாமல் செலவு செய்வதையும், தொழில் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை அறிந்தேன். மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன்.
இந்த மனு ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று வாதிட்டப்பட்டது. இதைகேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் கணவன் மனைவி இடையே உணர்ச்சிப் பற்றுதல் இல்லை என்பது தெரியவருகிறது. மனுதாரரை அவரது கணவர் ஏடிஎம் போல பயன்படுத்திவந்துள்ளார். கொடுத்த பணமும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மனுதாரார் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். இதனை கீழமை நீதிமன்றம் பரிசீலிக்கத் தவறிவிட்டது. ஆகவே இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது" என்று உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மறுபிரேத பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி