ETV Bharat / bharat

கலந்துரையாடல் கூட்டத்தில் சலசலப்பு - ஆட்சியரை நோக்கி மைக்கை வீசிய முதல்வர் கெலாட்!

author img

By

Published : Jun 3, 2023, 6:37 PM IST

ராஜஸ்தானில் கலந்துரையாடல் கூட்டத்தின் போது மைக் பழுதானதால், ஆத்திரம் அடைந்த முதலமைச்சர் அசோக் கெலாட் அதை மாவட்ட ஆட்சியரை நோக்கி வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Asoak Ghelot
அசோக் கெலாட்

பார்மர்: ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பார்மர் மாவட்டத்துக்கு சென்றார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மகளிர் குழுவினருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது மாநில அரசு மகளிருக்காக கொண்டு வந்துள்ள திட்டத்தால் பயனடைந்த பெண்கள் பேசினர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதற்காக முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் கெலாட் பேச முயன்றார். அப்போது அவர் கையில் வைத்திருந்த மைக், சரியாக வேலை செய்யவில்லை. இதையடுத்து அருகே நின்று கொண்டிருந்த பெண் மற்றொரு மைக்கை முதலமைச்சரிடம் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட முதலமைச்சர் கெலாட், வேலை செய்யாத மைக்கை அருகில் நின்றிருந்த பார்மர் மாவட்ட ஆட்சியரை நோக்கி கோபத்தில் வீசினார். கீழே விழுந்த மைக்கை ஆட்சியர் எடுத்தார். இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் முதலமைச்சர் அசோக் கெலாட் பேசத் தொடங்கினார். அப்போது பெண்களுக்கு பின்னால் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இதனால் கோபம் அடைந்த கெலாட், அவர்களை வெளியேறுமாறு கூறினார். காவல் கண்காணிப்பாளரை எங்கே என கேள்வி எழுப்பிய கெலாட், மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என விமர்சித்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் வர உள்ளதால், அங்கு வெற்றி பெற காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட்டுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. இதுதொடர்பாக கட்சி மேலிடம் இருவரையும் டெல்லிக்கு அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.

காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், முதலமைச்சர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டப்பட்டதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலை அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இணைந்து சந்திக்க உள்ளதாகவும் வேணுகோபால் தெரிவித்தார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதைப் போல் நடப்பாண்டு நடைபெறும் பிற மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் நிர்வாகிகளை, நேரில் அழைத்து பேசும் கட்சித்தலைவர்கள் சமசரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.