டெல்லி: கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யு.பி.ஐ. payment appஇல் பரிவர்த்தணை வரம்பு விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனைகளை மட்டுமே பயனர்கள் மேற்கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.
யு.பி.ஐ. டிஜிட்டல் பேமண்ட் தளங்களை முறைப்படுத்தி வரும் தேசிய பேமண்ட்ஸ் கார்பரேஷன் நிறுவனம்(NPCI), பணப் பரிவர்த்தனை ஆப்களில் பயனர்களின் பரிவர்த்தணை உச்ச வரம்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி முதல் பேமண்ட்ஸ் ஆப்களில் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது. தற்போது வரை பரிவார்த்தணைக் கட்டுப்பாடுகள் அமலில் இல்லாத நிலையில், கூகுள் பே, போன் பே நிறுவனங்கள் கட்டண பரிவர்த்தனை சந்தையில் 80 சதவீத மதிப்பை பிடித்து வைத்துள்ளன.
சந்தையில் ஏற்படும் செறிவு அபாயத்தை குறைக்க மூன்றாம் தர கட்டண பரிவர்த்தனை ஆப்களின் சந்தை மதிப்பை 30 சதவீதமாக மாற்றுவது குறித்து தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்மொழிவை கொண்டு வந்தது. இதுகுறித்து ஆர்.பி.ஐ., நிதி அமைச்சகம், மூத்த அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் விரைவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களில் பரிவர்த்தனை உச்ச வரம்பு அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ப்ளூ டிக் மறுவெளியீடு மீண்டும் ரத்து - ஆள்மாறாட்டங்களை தடுக்க எலான் நடவடிக்கை