ETV Bharat / bharat

உ.பி. துணை முதலமைச்சருக்கு கரோனா உறுதி! - தினேஷ் சர்மா

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மாவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Dinesh Sharma
Dinesh Sharma
author img

By

Published : Apr 28, 2021, 8:16 PM IST

நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாம் அலையானது வேகமாகப் பரவிவருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா கரோனா பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

தற்போது அவர் சஞ்சய் காந்தி போஸ்டகிரேடுயட் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (எஸ்ஜிபிஜிஐ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தினேஷ் சர்மாவுக்கு கரோனா உறுதியானதை அடுத்து, அவரது மனைவிக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், "சில நாள்களுக்கு முன்பு, நான் கரோனா பரிசோதனை செய்ததில், எனக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்தியுள்ளேன். தற்போது மேல்சிகிச்சைக்காக, நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.