உத்தரப் பிரதேசம்: பிரயக்ராஜிலுள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் நேற்று(அக்.20) சிகிச்சைப் பெற்று வந்த டெங்கு நோயால் பாதிப்படைந்த ஓர் நோயாளிக்கு பிளாஸ்மாவிற்கு பதிலாக ஜூஸை உடலில் ஏற்றியதால் நோயாளி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உடனே அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு அந்நோயாளி மாற்றப்பட்டும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்தக் காணொலி சமூகவலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் உத்தரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பதாக் வரைச் சென்று அந்த தனியார் மருத்துவமனை மூடப்பட்டு அரசாங்கத்தால் சீல் வைக்கப்பட்டது.
இந்த இரத்தம் வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து துணை முதலமைச்சர் பதாக் கூறுகையில், “ டெங்கு நோயாளிக்கு பிளாஸ்மாவிற்கு பதிலாக எழுமிச்சை ஜூஸ் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் உரிமையாளர் சவுரவ் மிஸ்ரா கூறுகையில், அனுமதிக்கப்பட்ட நோயாளி பிரதீப் பாண்டேவின் ரத்தம் 17,000 யூனிட்டிற்கு கீழே சென்றதால் அவருக்கு எஸ்ஆர்என் மருத்துவமனையிலிருந்து பிளாஸ்மா வரவழைக்கபட்டது. அதில் மூன்று யூனிட் ஏற்றப்பட்டதுமே அவர் உடல் அதற்கு மாறாக செயல்பட்டதை உணர்ந்து நாங்கள் செலுத்துவதை நிறுத்திவிட்டோம். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் 2 நகைக்கடைகளின் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல்