ETV Bharat / bharat

அண்டை நாடுகளுக்கு ரூ.5 ஆயிரம் கோடியில் உதவி.. மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு! - பட்ஜெட் சிறப்பம்சங்கள்

அண்டை நாடுகளான பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த உதவும் வகையில் மத்திய பட்ஜெட்டில் 5 ஆயிரத்து 848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
author img

By

Published : Feb 2, 2023, 9:21 AM IST

டெல்லி: 2023-24 நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் நேற்று (பிப்.1) தாக்கல் செய்தார். அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடுத்தர வர்க்க மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகின.

வெளிநாடுகளான நட்புறவை மேம்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் அயலக மேம்பாட்டு உதவியாக 5 ஆயிரத்து 848 கோடியே 58 லட்ச ரூபாய் ஒதுக்கி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த நிதியில் இருந்து லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் வளர்ச்சிகளுக்கு உதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக பூடானுக்கு 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி பட்ஜெட்டில் பூடானுக்கு 2 அயிரத்து 266 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு 2023-24 பட்ஜெட்டில் கூடுதலாக 134 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. பிராந்திய இணைப்பு முயற்சியின் ஒரு படியாக ஈரானின் உள்ள சாபஹார் துறைமுக உள்கட்டமைப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளன.

அப்கானிஸ்தானுக்கு தொடர் உதவிகள் வழங்கப்பட்டு வரும் போதிலும் நடப்பு பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மொரிசியஸ் நாட்டிற்கு 460 கோடியே 79 லட்ச ரூபாயை மேம்பாட்டு நிதியாக இந்தியா அறிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவில் மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தி வருகிறது.

கடந்த நிதி பட்ஜெட்டில் மாலத்தீவுக்கு 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் நடப்பு 2023 -24 பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்காக 40 கோடி ரூபாய் கூடுதலாக அறிவிக்கப்பட்டு உள்ள்து. ஒட்டுமொத்தமாக மாலத்தீவிற்கு மத்திய பட்ஜெட்டில் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றபடி நேபாளத்திற்கு 500 கோடி ரூபாய், பொருளாதார சறுக்கலில் சிக்கித் தவிக்கும் அண்டை நாடான இலங்கைக்கு 150 கோடி ரூபாய், வங்காளதேசத்திற்கு 200 கோடி ரூபாய் நிதி உள்ளிட்ட உதவிகளை அண்டை நாடுகளுக்கு வழங்குவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பங்கு வெளியீட்டை திரும்பப் பெற்றது அதானி.. முதலிட்டாளர்களுக்கு பணம் வாபஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.