மும்பை : சமூக நீதிக்கான ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு அறிவுரை வழங்கினார்.
ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஞாயிற்றுக்கிழமை (அக்.24) மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நடிகர் ஷாருக்கான் தனது மகன் ஆர்யன் கானை மது, போதை புனர்வாழ்வு சிகிச்சை மையத்துக்கு அனுப்ப வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “இளம் வயதிலேயே போதை மருந்து சாப்பிடுவது நல்லதல்ல. ஆர்யன் கானுக்கு எதிர்காலம் உள்ளது. ஆகவே, ஆர்யன் கானை அமைச்சகத்துடன் தொடர்புடைய போதை ஒழிப்பு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு நான் ஷாருக் கானுக்கு அறிவுறுத்துகிறேன்.
அவரை சிறையில் அடைப்பதற்கு பதிலாக 1 அல்லது 2 மாதங்கள் அங்கு இருக்க வேண்டும். நாடு முழுவதும் இதுபோன்ற மையங்கள் நிறைய உள்ளன. 1 அல்லது 2 மாதங்களில், ஆர்யன் கான் போதைப் பழக்கத்திலிருந்து மீண்டுவிடுவார்” என்றார்.
போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலில் உள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் தற்போது ஆர்யன் கான் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 20 நாள்களுக்கு பின் 10 நிமிடங்கள்: சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்!