ETV Bharat / bharat

இந்து பெண்களை அவமதித்தால் கைகளை வெட்டுவோம் - மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

இந்து பெண்களை அவமதிப்பவர்களின் கைகளை வெட்டுவோம் என மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Mar 19, 2023, 8:23 PM IST

மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு
மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு

பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் எம்எல்ஏவாக இருப்பவர் பாய் வீரேந்திரா. இவர், இந்து-இஸ்லாமியர் பிரிவினையை பயன்படுத்தி பாஜக போலி அரசியல் செய்வதாகவும், ஆனால் பாஜக தலைவர்கள் சிலர் தங்கள் மகள்களை, இஸ்லாமிய சமூகத்தினருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் கூறினார். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் இதற்கு உதாரணம் என்றும், தங்கள் மகள்களை இஸ்லாமியர்களுக்கு திருமணம் செய்து வைப்பதை விட்டுவிட்டு, அவர்களை பாஜக தலைவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, "சனாதன தர்மத்தின் மகள்களான இந்து பெண்கள், இந்தியாவின் மகள்கள் ஆவர். இந்து பெண்களின் கண்ணியத்துடன் விளையாடுபவர்களின் கைகளை வெட்டுவோம். வேண்டுமென்றால் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர்கள் தங்கள் பெண்களை, இஸ்லாமியர்களுக்கு திருமணம் செய்து கொடுக்கட்டும். இந்தியா என்பது இந்து நாடு என்பதை மீண்டும் நினைவு படுத்துகிறேன்" என்றார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக சட்டமேலவை உறுப்பினர் சந்தோஷ் சிங், "ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தவறான நோக்கத்தில் இந்து பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் அணுகினால் அவர்களது விரல்களை வெட்டுவேன்" என கூறினார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பாஜக பிரமுகர்கள் இடையேயான கருத்து மோதல், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்களின் விபரங்களை தாருங்கள்" - ராகுலிடம் போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.