ETV Bharat / bharat

மத்திய உள்துறை அமைச்சக விருது பெறும் 5 தமிழ்நாடு காவலர்கள் - Union Home Ministry

2022ஆம் ஆண்டில், சிறந்த புலன் விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது, 5 தமிழ்நாடு காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Union Home Ministry Medal Award
Union Home Ministry Medal Award
author img

By

Published : Aug 12, 2022, 11:59 AM IST

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சக்கம் இன்று (ஆக. 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2022ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சிறந்த புலன் விசாரணைக்கான விருது சிறப்பாக செயல்பட்ட 151 காவலர்களுக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், சிபிஐ அதிகாரிகள் 15 பேர், மகாராஷ்டிரா காவலர்கள் 11 பேர், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேச காவலர்கள் தலா 10 பேர், கேளரா, ராஜஸ்தான், மேற்கு வங்க காவலர்கள் தலா 8 பேர், பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவலர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மேலும், இதில் 28 மகளிர் காவலர்களும் அடக்கம்.

இந்நிலையில், தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த நான்கு பெண்கள் உள்பட 5 பேருக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி, ஆய்வாளர்கள் அமுதா, சசிகலா, பாண்டி முத்துலட்சுமி, உதவி ஆய்வாளர் செல்வராஜன் ஆகியோர் மத்திய உள்துறையின் சிறந்த புலன் விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருதை பெறுகின்றனர்.

இதையும் படிங்க: காவலர்களுக்கு 'படா கானா' என்னும் கறி விருந்து - அசத்திய டிஜிபி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.