டெல்லி: கரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை, இரண்டாவது தவணை என இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்தியாவில் தற்போது வரை 198.20 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய 9 மாதத்திற்கு பிறகு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளியை 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஜூலை 6) அறிவித்துள்ளது.
நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்துவதற்கான தேவை இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்