இன்று (ஜூன்.16) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்த முடிவை அறிவித்த மத்திய ரசாயன மற்றும் உரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா டிஏபி உரங்களுக்கான மானியத் தொகையை அமைச்சரவை பை ஒன்றுக்கு 700 ரூபாய் உயர்த்தியதாகத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் உள்ளீட்டுப் பொருள்களின் விலைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியப் பெருங்கடலின் ஆழ்கடலில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்வதற்கான மற்றொரு திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த முடிவு இந்தியாவில் தொடக்க நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, ’ஆத்மனிர்பர் பாரத்’ பிரச்சாரத்தின் பிரதமரின் பார்வைக்கும் ஊக்கமளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.