வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழக சட்ட திருத்த மசோதாவுக்கு (2021) ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. வங்கிகள் கடனை காலம் தாழ்த்தி கொடுப்பதற்கான சட்ட உரிமையின் கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வங்கியில் பணம் செலுத்தியவர்கள் வங்கி திவாலான 90 நாள்களுக்குள் 5 லட்ச ரூபாய் வரை காப்பீட்டு தொகை பெற முடியும்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார். இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்டியலிடப்பட்ட வங்கிகள், இந்தியாவில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள், சிறிய கொடுப்பனவு வங்கிகள், பிராந்திய கிராப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடனில் உள்ள வங்கிகள் அனைத்துக்கும் இந்த சட்ட திருத்தம் பொருந்தும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெகாஸஸை ஒன்றிய அரசு வாங்கியதா? இல்லையா? - ராகுல் கேள்வி