அகமதாபாத்: குஜராத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் இன்று (நவ.27) பேசிய ஜேபி நட்டா பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான பொது சிவில் சட்டம் குறித்து தெரிவித்தார். அப்போது அவர், பொது சிவில் சட்டம் விரைவில் பல மாநிலங்களில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) ஒரு "தேசியப் பிரச்சினை". நாட்டின் வளங்களும் பொறுப்புகளும் அனைவருக்கும் சமம். ஆகவே, பொது சிவில் சட்டமானது வரவேற்கத்தக்க ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘ நாட்டிற்கும் சமூகத்திற்கும் எதிராக செயல்படும் சக்திகளைக் கட்டுப்படுத்துவது மாநிலத்தின் பொறுப்பு. மனித உடலில் உள்ள ஆன்டிபாடிகளைப் போல, கெட்ட செல்களைக் கண்காணிப்பதும், தேச விரோத செல்களை கட்டுப்படுத்துவதும் அரசின் பொறுப்பு. சில செல்கள் பூமிக்கடியில் செயல்படுகின்றன. அத்தகைய செல்களைக் கண்காணிக்க இந்த பயங்கரவாத எதிர்ப்பு குழு தேவைப்படுகிறது. பாஜக அனைவரின் வளர்ச்சிக்குமான கட்சி. மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் பாஜக ஆதரவுடன் இந்தியாவின் குடியரசுத் தலைவரானார். அதன்பின் மோடி தலைமையிலன மத்திய அரசு பல முஸ்லிம் ஆளுநர்களையும் நியமித்துள்ளது.
நாங்கள் 'சப்கா சத், சப்கா விகாஸ்' கொள்கையைப் பின்பற்றுகிறோம். குஜராத்தில் வேட்பாளர் சீட்டுகள் வெற்றியின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்து முஸ்லீம் என்று பார்த்து அல்ல என்று தெரிவித்தார். அதன்பின் அவரிடம் பாஜக தேர்தல் அறிக்கையில் அதன் போட்டியாளர்களைப் போலவே பல "இலவசங்களை" அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு நட்டா கூறுகையில் ‘அதிகாரம் மற்றும் கவர்ச்சியை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
குஜராத்தில் தாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று ஆம் ஆத்மி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நன்றாக தெரியும். ஆகவே தங்களுக்குத் தேவையான நிதி மற்றும் பட்ஜெட்டை கணக்குப் பார்க்காமல் திட்டங்களை அறிவிக்கலாம். எங்கள் திட்டங்கள் ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரமளிப்பதற்கான நடவடிக்கைகள். குறிப்பாக மக்கள்தொகையில் பின்தங்கிய ஒரு பிரிவினருக்கானவை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொது சிவில் சட்டம் குறித்து கர்நாடக அரசு தீவிர ஆலோசனை.. முதலமைச்சர் பசவராஜ் தகவல்