மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உமா பாரதி, போராட்டக்காரர்களுடன் இணைந்து, ஒரு மதுபானக் கடை மீது கல் வீசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள உமா பாரதி, "குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுக்கடைகளைத்தான் எதிர்த்தோம். இந்த மதுபானக்கடையால், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. ஏழை மக்களின் வாழ்வதாரம் பாதிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த மதுக்கடைகளை மூட பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. மூடுவதாக உத்தரவாதம் அளித்தும், தொடர்ந்து கடை செயல்பட்டு வந்ததால் இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார். இதனிடையே உமா பாரதியின் மதுவுக்கு எதிரான பரப்புரைக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அம்மாநில பாஜக செய்தித்தொடர்பாளர் ஹிதேஷ் பாஜ்பாய் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் யோகி - புதிய அமைச்சரவை குறித்து மோடி, ஷா, நட்டாவிடம் ஆலோசனை