புது டெல்லி: தேர்வுகள், கல்வி ஆண்டு குறித்த வழிகாட்டுதல்களை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணையம் இன்று (ஜூலை.17) அனுப்பியுள்ளது.
அதன்படி, யுஜிசி செயலர் ராஜ்னிஷ் ஜெயின், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2021-2022ஆம் கல்வி ஆண்டின் முதல் ஆண்டு படிப்புகளுக்கான சேர்க்கை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப சேர்க்கைக்கான கடைசி தேதி அக்டோபர் 31ஆம் தேதி ஆகும். அக்டோபர் 1ஆம் தேதிக்குள் முதல் செமஸ்டர் தொடங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்புக்கான அனைத்து பள்ளி வாரியங்களின் முடிவுகளும் ஜூலை 31ஆம் தேதிக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்வுகள் தொடர்பான யுஜிசி வழிகாட்டுதல்களின் படி, நடப்பு கல்வி ஆண்டின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் கட்டாயமாக ஆஃப்லைன் / ஆன்லைன் முறைகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு முன்னதாக கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆதரவற்ற முதியோருக்கு அன்பு காட்டும் 'அடைக்கலம்' - இளைஞர்கள் உருவாக்கிய சரணாலயம்