பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர், ஃபாசிலா. இவர் தனது 2 குழந்தைகளுடன் அதேபகுதியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். இந்த ஆட்டோவை ஓட்டுநர் காலித் என்பவர் இயக்கி உள்ளார். அவருடன் அவரது மனைவி டசீனாவும் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்த ஆட்டோ பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராயபுரம் என்னும் கே.ஆர்.புரத்தில் இருக்கும் ஆர்டிஓ அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்த போகு வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த ஃபாசிலா மற்றும் டசீனா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதில் உயிரிழந்த ஃபாசிலாவின் ஒரு குழந்தை பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கே.ஆர்.புரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிசிடிவி: நெல்லையில் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி