ETV Bharat / bharat

மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அரங்கேறிய கொடூரம்! - அமித் மால்வியா

மேற்கு வங்க மாநிலத்திலும் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூரைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அரங்கேறிய கொடூரம்!

author img

By

Published : Jul 22, 2023, 7:02 PM IST

மால்டா (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள பமன்கோல்டா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது, பகுஹாட் பகுதி. இங்கு கடந்த ஜூலை 19 அன்று நிகழ்ந்த சம்பவம் என்ற தகவலின் அடிப்படையில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவானது சம்பவம் நிகழ்ந்து 3 முதல் 4 நாட்கள் கழித்து வெளிவந்ததாக அறியப்படுகிறது.

இவ்வாறு வெளியான வீடியோவில், இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, சுற்றி இருக்கும் மற்ற பெண்கள் அவர்களை கடுமையாகத் தாக்குவது போன்று உள்ளது. இது தொடர்பாக முன்னாள் வங்கி ஊழியரும், பாஜகவின் தேசிய ஐடி பிரிவின் பொறுப்பாளருமான அமித் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், ''மேற்கு வங்க மாநிலத்திலும் பதற்றம் தொடர்கிறது. மால்டா மாவட்டத்தில் பமன்கோலா காவல் நிலையத்தின் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுவா ஹாட் பகுதியில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு உள்ளனர். அது மட்டுமல்லாமல், அவர்கள் பலரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு சித்ரவதைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது காவல் துறையினர் அமைதியாக இருந்து உள்ளனர். இந்த சம்பவம் ஜூலை 19 அன்று காலை நிகழ்ந்து உள்ளது. ஒரு வெறித்தனமான கும்பல், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் ரத்தத்தை பெறுவதில் நோக்கமாக இருக்கிறது.

இந்த கொடூரமான நிகழ்வு இதயத்தை நொறுக்குவது போன்று உள்ளது. மாநிலத்தின் உள்துறை அமைச்சராக உள்ள மம்தா பானர்ஜி நடிக்காமல் செயலில் காட்டி இருக்கலாம். ஆனால், அவர் இது தொடர்பாக எதுவும் செய்யவில்லை. இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவத்திற்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

அதேநேரம், அவர் தனது வலியையும், வேதனையையும் கூட தெரிவிக்கவில்லை. ஏனென்றால், இது ஒரு முதலமைச்சராக தனது தோல்வியை ஒப்புக்கொண்டதற்குச் சமம். ஆனால், அவர் அடுத்த ஒரு நாள் கழித்து கண்ணீர் விட்டார். ஏனெனில், அது அரசியல் ஆதாயத்திற்கு ஆகத்தான்” என தெரிவித்து உள்ளார்.

இதனிடையே இது தொடர்பாக மால்டா எஸ்.பி. பிரதீப் குமார் ஜாதவ் கூறுகையில், “சம்பவம் நடந்த இடத்திற்கு மூத்த அதிகாரிகளை அனுப்பி உள்ளோம். இந்த விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது சுப் மோட்டோ (sup moto) வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாங்கள், வெளியான வீடியோவை மிகவும் கவனமுடன் ஆராய்ந்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

மேலும், பொருட்களை திருடியதாக இரண்டு பெண்களை உள்ளூர் வியாபாரிகள் கையும் களவுமாக பிடித்து உள்ளனர். இதன் பின்னர் பல பெண்கள் சேர்ந்து, பிடிபட்ட இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: மணிப்பூர் விவகாரம்: 5வது குற்றவாளி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.