ETV Bharat / bharat

இந்தியாவில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி

author img

By

Published : Dec 28, 2021, 12:52 PM IST

கோவாக்ஸின் (Covaxine), கோவிஷீல்டு (Covishield) என இரண்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள நிலையில், மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா

புது டெல்லி: மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று (டிச 28) காலை தனது டிவிட்டர் பக்கத்தில் புதியதாக இரண்டு தடுப்பூசிகள் மற்றும் அவசரக் காலத்தில் உபயோகிக்கக்கூடிய மருந்திற்கும் (Anti-viral drug Molnupiravir) அனுமதி அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு Corbevax Vaccine (கோர்ப்வாக்ஸ்) மற்றும் Covovax Vaccine (கோவோவக்ஸ்) என பெயரிடப்பட்டுள்ளது.

"Corbevax தடுப்பூசி, கோவிட்19க்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட RBD புரோட்டீன் தடுப்பூசி ஆகும். இது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-E நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி ஆகும்" என மன்சுக் எல். மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Covovax தடுப்பூசி புனேவை தலைமையிடமாகக் கொண்ட ஸீரம் இன்ஸ்டிட்டியூட்-இல் (serum institute of india) உருவாக்கப்பட்டது.

Molnupiravir மருந்தை கடுமையான கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Niti Ayog Health Index: இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.