ETV Bharat / bharat

காஷ்மீரில் இருவேறு இடங்களில் தாக்குதல்... போலீஸ் உள்ளிட்ட 2 பேர் காயம் - கரன் குமார் சிங்

காஷ்மீரின் இரண்டு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் காவலர் உள்ளிட்ட 2 பேர் காயமடைந்தனர்.

கையெறி குண்டு தாக்குதல்
கையெறி குண்டு தாக்குதல்
author img

By

Published : Aug 16, 2022, 6:53 AM IST

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றில் பயங்கரவாதிகள் நேற்று (ஆக. 15) கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர். இதில், காவலர் ஒருவர் காயமடைந்தார். இதுகுறித்து காஷ்மீர் மண்டல் காவல் துறை தனது ட்விட்டர் பக்கத்தில்,"பயங்கரவாதிகள் காஷ்மீரின் காவல் கட்டுப்பாட்டு அறை மீது தொடுத்த கையெறி குண்டு தாக்குதலில் காவலர் ஒருவர் காயமடைந்தார்.

தற்போது அதன் சுற்றுவட்டார பகுதிகள் போலீஸின் முழுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது" என பதிவிட்டுள்ளது. முன்னதாக, மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில் உள்ள கோபல்போரா பகுதியில் நேற்று மாலை நடந்த மற்றொரு கையேறி குண்டு தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்தார்.

  • #Terrorists hurled grenade in Gopalpora Chadoora area of #Budgam in which one civilian namely Karan Kumar Singh got injured. He has been shifted to Srinagar hospital for treatment where his condition is stated to be stable. Area #cordoned off. Further details shall follow.

    — Kashmir Zone Police (@KashmirPolice) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், அவரின் பெயர் கரன் குமார் சிங் என காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது, அவர் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நலமாக இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோபல்போரா தாக்குதலை தொடர்ந்து, காஷ்மீரின் காவல் கட்டுப்பாட்டு அறையிலும் கையெறி குண்டு தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அட்டாரி வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வில் கர்ஜித்த பாதுகாப்பு படை வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.