ETV Bharat / bharat

'கல்யாணம் செஞ்சு வைங்க' - காவல் நிலையம் சென்ற லெஸ்பியன் காதல் ஜோடி!

கர்நாடகாவில் ஒருவரை ஒருவர் காதலித்த தன்பாலின பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முயன்ற நிகழ்வு அரங்கேறியது.

காதலில் விழுந்த இரு பெண்கள்-திருமணம் செய்துகொள்ள முயற்சி

author img

By

Published : May 13, 2022, 7:31 PM IST

கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதியில் ஒருவரை ஒருவர் காதலித்த தன்பாலின ஈர்ப்பாள பெண்கள் திருமணம் செய்துகொள்ள முயன்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

22 வயதுடைய இரு பெண்களும் ஒரே கல்லூரியில் படித்துள்ளனர். அப்போது இருவருக்கும் காதல் உணர்வு தோன்றியுள்ளது. இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் தன்பாலின திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

இருவரும் திருமணம் குறித்து பெற்றோருடன் பேசியுள்ளனர். ஆனால், அவர்கள் சம்மதிக்கவில்லை.

இன்நிலையில் இருபெண்களும் தும்கூர் நகர காவல் நிலையத்திற்குச்சென்று தங்களுக்கு திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர். ஆனால், அங்கு இருந்த காவல் துறை அலுவலர் திருமணம் செய்து வைக்காமல், பெண்களின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அங்கு வந்த பெண்களின் பெற்றோர், இவர்களை வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

இருப்பினும் பெண்கள் இருவரும் கிராமத்தை விட்டு தப்பித்துள்ளனர். பின்பு வியாழக்கிழமை (மே 12) திரும்ப ஊருக்கு வந்து திருமண ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். இதையறிந்த பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து, பெண்களுக்கு அறிவுரை கூறி மனதை மாற்றி வீட்டுக்கு அழைத்துச்சென்றனர்.

இதையும் படிங்க:'எனக்கே பயமா இருக்கு; சுடிதார் அணிந்துகொண்டுதான் போயிருந்தேன்' - பைக் ரேஸிங்கில் இருக்கும் அஜித் ரசிகையிடம் அத்துமீறிய இளைஞர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.