சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லை வழியாக சிலர் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி, உளவுத்துறை அதிகாரிகள் பதுங்கியிருந்த கடத்தல்காரர்களை பிடித்துள்ளனர். மேலும், எல்லை தாண்டி கடத்தி வந்த 12 கிலோ போதைப் பொருட்களையும் பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
-
Big Blow to Trans Border narcotic network: In an intelligence-led operation, CI Ferozepur has apprehended 2 persons and recovered 12 Kg Heroin.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) October 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
FIR under NDPS Act is registered and Investigations on-going to establish backward & forward linkages (1/2) pic.twitter.com/NsK48hQBwV
">Big Blow to Trans Border narcotic network: In an intelligence-led operation, CI Ferozepur has apprehended 2 persons and recovered 12 Kg Heroin.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) October 12, 2023
FIR under NDPS Act is registered and Investigations on-going to establish backward & forward linkages (1/2) pic.twitter.com/NsK48hQBwVBig Blow to Trans Border narcotic network: In an intelligence-led operation, CI Ferozepur has apprehended 2 persons and recovered 12 Kg Heroin.
— DGP Punjab Police (@DGPPunjabPolice) October 12, 2023
FIR under NDPS Act is registered and Investigations on-going to establish backward & forward linkages (1/2) pic.twitter.com/NsK48hQBwV
மேலும் அவர்கள் இருவரும் இந்தியர்கள் என்பதும், பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்களை விற்பதற்காக கடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது இது தொடர்பாக பஞ்சாப் சிஜிபி கவுரவ் யாதவ் 'X' தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "எல்லை தாண்டி போதைப் பொருட்களை கடத்தி வந்த 2 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 12 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்த ஃபெரோஸ்பூர் உளவுத்துறை (CI) அதிகாரிகள், என்டிபிஎஸ் (NDPS Act) சட்டத்தின் கீழ் எப்ஐஆர் (FIR) பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களுக்கு இடையேயான போதைப் பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் அது குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளது. மேலும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், முல்லன்பூர் டாக்காவிலிருந்து போதைப்பொருள் கடத்தி வந்த நபர்களை கைது செய்து, போலியான நம்பர் பிளேட் கொண்ட 38 வாகனங்கள் மற்றும் 1 துப்பாக்கியுடன் ரூ.4.94 கோடி பணத்தையும் மீட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, செப்டம்ப 9 அன்று பகிர்ந்த ட்விட்டர் பதிவில், கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் சுமார் 145 கிலோ போதைப் பொருட்களை ஃபாசில்காவில் உள்ள எஸ்எஸ்ஓசி (SSOC team of the police) போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும், அவர்கள் என்டிபிஎஸ் (NDPS Act) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் எனவும் தகவல் தெரிவித்துள்ளதாக பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: மழை வேண்டி மேளதாளம் முழங்க தவளைகளுக்கு திருமணம்.. கோவையில் ருசிகரம்!