கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் கீழ் இயங்கும் நுகு வனவிலங்கு சரணாலயத்தில் மூன்று புலிக்குட்டிகள் மோசமான உடல்நிலையில் காணப்பட்டன. அவற்றை மீட்ட வனத்துறை அலுவலர்கள் மைசூர் உயிரியல் பூங்காவிற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு புலிக்குட்டி உயிரிழந்த நிலையில், சிகிச்சைக்கு பலனின்றி மற்றொன்றும் உயிரிழந்தது.
தற்போது உயிருக்கு போராடும் ஒரு ஆண் குட்டிக்கு மட்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த இரு குட்டிகளை உடற்கூராய்வு செய்ததில், அவை தங்களுடைய தாயை காணாத ஏக்கத்திலும், பசியிலும் உயிரிழந்தது தெரியவந்தது. இந்தப் புலிகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே இடத்தில் மற்றொரு புலியின் கால்தடங்களை வன அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர். அந்த புலியைத் தேடுவதற்காக அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாக திட்ட இயக்குநர் எஸ்.ஆர்.நதேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாலியல் சிடி விவகாரம்: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இளம்பெண் கடிதம்!