பெங்களூரு: பெங்களூருவில் உள்ள இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனையில் கடந்த ஆண்டு கரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரண்டு நோயாளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது. உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகியது. இதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு தற்போது கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு (2020) ஜூன் மாதம் பெங்களூரு ராஜாஜிநகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க பெண், மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலேயே உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. உடல்களை கோரி யாரும் வராததால் அங்கேயே வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். இதையடுத்து ஓர் ஆண்டிற்கு பிறகு, தற்போது அழகிய நிலையில் அந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜாஜிநகர் பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் குமார், கர்நாடக தொழிலாளர் துறை அமைச்சர் சிவராம் ஹெப்பாருக்கு (Shivaram Hebbar) கடிதம் எழுதியுள்ளார். அதில், "இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்துக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும்.
அலட்சியமாக செயல்பட்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’பெண் எம்பிக்கள் போகப்பொருள் அல்ல...’ - பொங்கிய ட்விட்டர்வாசிகள்... வருத்தம் தெரிவித்த சசி தரூர்