புதுச்சேரி: முதலியார்பேட்டையில் இ.எஸ்.ஐ மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த மண்டல அலுவலகத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே ஆகிய பகுதிகளில் தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்குத் தொழிலாளர் துறை அறிவுறுத்துதலின் படி, மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் வழங்கப்படுகிறது.
இதில் முறைகேடு நடப்பதாக சிபிஐக்கு வந்த புகாரின் அடிப்படையில், இ.எஸ்.ஐ அலுவலகத்தில் ற நான்கு சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
ஐந்தரை மணி நேரம் நடைபெற்ற சோதனையில் காப்பீட்டுத் திட்டங்களில் முறைகேடு செய்து லஞ்சம் பெற்றதாக இ.எஸ்.ஐ துணை இயக்குநர் பெட்ராஸ் கிரகரி கல்கோ மற்றும் பாதுகாப்பு அலுவலர் மோஹித் ஜான் ஆகியோரை கைது செய்து அழைத்து சென்றனர்.
மேலும் தகவல்கள் அடங்கிய ஹார்ட்டிஸ்க் மற்றும் இரண்டு அட்டைப் பெட்டிகளில் முக்கிய ஆவணங்களையும் கைபற்றி எடுத்துச்சென்றனர்.
இதையும் படிங்க :சச்சினால் மருத்துவராகும் விவசாயியின் மகள்!