டெல்லி: சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் கணக்கில் வைத்திருந்த டி.பியை சில மணி நேரங்களுக்கு நீக்கியது.
இது குறித்து விளக்கமளித்த ட்விட்டர் நிர்வாகம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பயன்படுத்திய புகைப்படத்திற்கு ஒருவர் காப்புரிமை கோரினார். இதன் காரணமாகவே அந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது. இது தொடர்பான புகார்கள் சரிசெய்யப்பட்டதும், மீண்டும் அதே படம் பதிவேற்றப்பட்டது எனத் தெரிவித்தது.
சுமார் 23.6 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பக்கத்தில் உலக காப்புரிமை கொள்கையின் அடிப்படையில் புகைப்படம் நீக்கப்பட்டதாகத் தெரிவித்த சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.
அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட இரண்டாவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பழங்குடியினர் வீட்டில் உணவருந்திய அமித்ஷா!