சமூக வலைதளங்களுக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கை நீதிபதி ரேகா பள்ளி தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. அப்போது ட்விட்டர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்ற ஒரு கண்காணிப்பு அலுவலரை நியமிப்பதாகத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த உயர் நீதிமன்றம், ட்விட்டர் நிறுவனம் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும். இந்த விவகாரத்தில் இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை விரைவில் வரையறை செய்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலைமைச் செயலாளரை அழைத்த மத்திய அரசு... அனுப்ப அடம்பிடிக்கும் மம்தா!