காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் விஜய் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் சூரியநாராயணன், சத்யநாராயணன் என்ற இரட்டை மகன்கள் இருந்தனர்.
இவர்கள் இருவரும் அக்.16ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் குடியிருப்பின் 25ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட தகவலில், சம்பவ நாளன்று சிறுவர்கள் திடீரென நள்ளிரவில் நிலாவை பார்க்க சென்றதாகவும், அதையடுத்து அவர்கள் கீழே விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அவர்களது தந்தை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே, முக்கிய வேலை காரணமாக வெளியூருக்கு சென்றுள்ளார். இதனிடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து முழு தகவல், உடற்கூராய்விற்கு பின்னரே தெரியும் என்று காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாடியிலிருந்து தவறி விழுந்த நபர்: கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரைக் காத்த இளைஞர்!