ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் திருத்த மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்! எதிர்க்கட்சிகள் எதிர்க்க என்ன காரணம்?

ஜம்மு காஷ்மீர் திருத்த மசோதாக்கள் இரண்டும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மசோதா நிறைவேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 7:32 PM IST

டெல்லி : ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது.

  • VIDEO | "When they (Kashkiri Pandits) were displaced, they were forced lived as refugees in their country. Around 46,631 families were displaced in their own country. This Bill is to get them rights, this Bill is to give them representation," says Union Home Minister while… pic.twitter.com/l9K9F2fsGA

    — Press Trust of India (@PTI_News) December 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது. இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான திருத்த மசோதா மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா ஆகிய இரண்டு மசோதாக்கள் கடந்த ஜூலை மாதம் நடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தற்போது நடந்து குளிர்கால கூட்டத் தொடரில் இந்த இரண்டு மசோதாக்களும் நேற்று (டிச. 5) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு மசோதாக்களையும் இன்று (டிச. 6) மக்களவையில் தாக்கல் செய்தார்.

  • VIDEO | "This Bill is another addition to the hundreds of progressive changes brought in the country by PM Modi. (The opposition) raised some legal and constitutional issues. First, they said that the law, in which the amendment has brought, itself is challenged in the court. I… pic.twitter.com/gI7zBCvKpi

இந்த மசோதாக்கள் மீதான விவாதங்கள் மக்களவையில் நிறைவு பெற்ற நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மசோதாக்களுக்கு ஆதரவாக 370 வாக்குகளும், எதிராக 70 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மூலம் மாநிலத்தில் பட்டியலின மக்கள், பழங்குடியினர், சமூகம் மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்கிறது எனக் கூறப்பட்டு உள்ளது.

  • VIDEO | "I stand in the House and say responsibly that Kashmir suffered for several years because of the two blunder during the tenure of PM Jawaharlal Nehru. The biggest mistake was that when our forces were winning, cease fire was announced and PoK came into existence. Had the… pic.twitter.com/lwGy8od3YR

மத்திய அரசு கொண்டு வந்த ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு மற்றும் மறுசீரமைப்பு திருத்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு மசோதாக்களும் ஜனநாயகமற்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங் : "கவனக்குறைவால் ஏற்பட்ட பிழை.. உணர்வுகளை புண்படுத்தினால் வருந்துகிறேன்" - நாடாளுமன்றத்தில் செந்தில் குமார் எம்.பி மன்னிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.