ETV Bharat / bharat

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி..ரூ.100 கோடிக்கு பேரம்? - Bargained for hundred Crores

தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களை100 கோடி ரூபாய்க்கு பேரம் பேச பாஜக முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ.100 கோடிக்கு பேரம் பேசப்பட்ட டிஆர்எஸ் எம்எல்ஏக்கள்

author img

By

Published : Oct 27, 2022, 10:16 AM IST

தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களை பாஜகவினர் ரூ.100 கோடி வரை பேரம் பேசி வாங்க முயற்சித்து வருவதாக சென்னூர் சட்டமன்ற உறுப்பினர் பால்கா சுமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாகராசிவரு பகுதியில் உள்ள பண்ணையில் டிஆர் எஸ் எம் எல் ஏக்களை பேர பேசி வாங்க வந்ததாக பாஜகவினர் மூன்று பேர், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பால்கா சுமன், “ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா 100 கோடி ரூபாய் மற்றும் ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டன.

நான்கு எம்எல்ஏக்களை பாஜக பிரமுகர்கள் விலைக்கு வாங்க முயன்றபோது, ​​எங்கள் (டிஆர்எஸ்) எம்எல்ஏக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தெலுங்கானா சமுதாயம் விற்பனைக்கு இல்லை என்பதை பாஜக உணர வேண்டும். கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் பாஜக பல சதிகளை செய்துள்ளது.

தெலுங்கானா கட்சியினர் கேசிஆர் தலைமையில் இயங்குவார்கள். முனுகோட்டில் தோற்கும் நிலையில், பாஜக பிரமுகர்கள் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக பல தீமைகளை செய்து வருகிறது.

டிஆர்எஸ கட்சியை பலவீனப்படுத்த பாஜக பெரிய சதி செய்கிறது. பாஜகவின் சதியை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். தூண்டுதல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். தெலங்கானாவில் இருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும். மோடி பதவி பறிபோய் விடுமோ என்று டெல்லியில் உள்ளவகர்ள் பயப்படுகிறார்கள்” என்றார்.

இதையும் படிங்க: Video: குவார்ட்டரும் கோழியையும் பரிசளித்த டிஆர்எஸ் நிர்வாகி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.