மும்பை: ரி பப்ளிக் தொலைக்காட்சி நிறுவனம் டிஆர்பி மோசடியில் ஈடுபட்டதாகவும், அதற்கு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council -BARC) முன்னாள் தலைமை செயல் அலுவலர் (சிஇஒ) பார்த தாஸ் குப்தா ஒத்துழைத்ததாகவும் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பார்த தாஸ் குப்தா டிசம்பர் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது வரை அவர் சிறையில் இருந்துவரும் நிலையில், தனக்கு பிணை வழங்கக்கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (மார்ச்2) அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக பார்த தாஸ் குப்தா பிணை மனுவை விசாரித்த செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துவிட்டது.
இதையடுத்து அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரூ.2 லட்சம் சொந்த பத்திரம் செலுத்தக்கோரி மனுதாரருக்கு பிணை வழங்கினார்.
இந்நிலையில், தன் மீதான டிஆர்பி மோசடிகளை ரி பப்ளிக் நிறுவனம் மறுத்துள்ளது.
இதையும் படிங்க: சன்சத் தொலைக்காட்சி தொடக்கம்!