ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனந்தகிரி பினகோட பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களது பகுதிக்கு சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கிடையில், அப்பகுதியையும் சேர்த்து, சாலைப் பணிகளுக்காக அரசாங்கம் ரூ.17 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.
ஆனால், இதுவரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் பினகோட பகுதி இளைஞர்கள், அவசர காலங்களில், கர்ப்பிணிகளையும், நோயாளிகளையும் தொட்டில் கட்டி தூக்கிச் செல்வது போல், தொட்டில் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள், விசாகப்பட்டினம் ஜிவிஎம்சி காந்தி சிலை அருகே இலைகளை அணிந்து, சாலை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: பழக்குடியினர் பகுதிகளில் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்!