ETV Bharat / bharat

’இந்திய விடுதலைக்காகப் போராடிய பழங்குடியின நாயகர்கள் போற்றப்பட வேண்டும்’ - பழங்குடியின நாயகர்கள்

இந்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகமும், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து நேற்று (நவம்பர் 26) பழங்குடியினர் பெருமை நாள் கருத்தரங்கு நடத்தியது.

முன்னணி நாயகன் பிர்ஸா முண்டா
பிர்ஸா முண்டா
author img

By

Published : Nov 27, 2021, 7:01 AM IST

புதுச்சேரி: இந்த நிகழ்வில் பேசிய புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைப் பேராசிரியர் ஆ. செல்லபெருமாள், ”பழங்குடியினப் போராட்ட நாயகர்களுக்கு பிர்சா முண்டா முன்னுதாரணமாகத் திகழ்கின்றார். அவரைப் போலவே பல நாயகர்கள் தங்களது பழங்குடியின மக்களைப் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுவித்து உரிமைகளை மீட்டெடுக்கப் போராடி உள்ளனர்.

ஷாகித் வீர் நாராயண் சிங், அல்லூரி சீத்தா ராமராஜு, ராணி கைடினிலு, பீமா நாயக், தலுக்கல் சந்து, ராம்ஜி கோண்ட், புது பகட் போன்றோரின் தியாகங்கள் போற்றப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

முன்னணி நாயகன் பிர்சா முண்டா

இக்கருத்தரங்கில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஏ. மாரிமுத்து கருத்துரை ஆற்றினார். அவர் பேசுகையில், "காந்தியின் வருகையால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய உத்வேகம் கிடைத்தது. ஆனால், 1850இல் இருந்து காந்தி வருகைக்கு முன்பு வரை இந்திய விடுதலைப் போராட்டம் பழங்குடியினர் கைகளில்தான் இருந்தது. இதில் முன்னணி நாயகனாக விளங்கியவர் பிர்சா முண்டா" என்றார்.

மேலும், அரசியல் மாற்றம் பலனளிக்க வேண்டுமானால் கூடவே கலாச்சார மாற்றமும் ஏற்பட வேண்டும் என்ற கருத்துடையவராக பிர்சா முண்டா இருந்ததாகவும், 25 வயதிலேயே மறைந்துவிட்ட பிர்சா முண்டா இளைஞர்களின் ஆதர்ச மாதிரியாக விளங்கக் கூடியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்விற்கு சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் ஜெ. காமராஜ் தொடக்கவுரை ஆற்றினார். அவர் கூறுகையில், “வரலாறு மறந்தாலும் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை இளைஞர்கள் தெரிந்துகொண்டு போற்ற வேண்டும்” என அறிவுறுத்தினார்.

பழங்குடியின மக்களின் தியாகத்தை நினைத்துப் பார்க்க வேண்டும்

தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சசிகாந்த தாஸ் தலைமையுரை ஆற்றுகையில், ”850 முதல் 1925 வரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கும் தியாகமும் என்றென்றும் நினைத்துப் பார்க்கப்பட வேண்டும், நமது கலாசார வேர்களை நாம் காப்பாற்றியாக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் இறுதியில், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் டாக்டர் எம். பாலாஜி தொகுப்புரை வழங்கி, நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் டாக்டர் ஜென்னி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்; ஜார்க்கண்ட் பழங்குடியினர் கிளர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.