ETV Bharat / bharat

விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்: பயிற்றுநர் பலி - தேசிய செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம், ஜல்கானில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பயிற்றுநர் விமானி உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்
விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்
author img

By

Published : Jul 16, 2021, 9:24 PM IST

மகாராஷ்டிரா: இன்று (ஜூலை.16) பிற்பகல் 3.30 மணியளவில் ஜல்கானில் உள்ள வர்தி கிராமத்திற்கு அருகே உள்ள மலைப்பாதையில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த பயிற்றுநர் நூருல் அமீன் (30) பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பயணித்த பயிற்சி விமானியான அன்ஷிகா குஜார் (24) படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துலே மாவட்டம், ஷிர்பூரில் உள்ள எஸ்.வி.கே.எம் வாரியத்தின் நிம்ஸ் அகாடமி ஆஃப் ஏவியேஷனில் இருந்து இந்தப் பயிற்சி விமானம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலிபான் தாக்குதலில் உயிரிழந்த தானிஷ் சித்திக் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.