ETV Bharat / bharat

தெலங்கானாவில் விமான விபத்து: தமிழ் பெண் விமானி உயிரிழப்பு - நல்கொண்டா

தெலங்கானாவில் பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி உயிரிழந்துள்ளார்.

TRAINEE AIRCRAFT CRASHES IN TELANGANA TWO PILOTS KILLED

author img

By

Published : Feb 26, 2022, 12:35 PM IST

Updated : Feb 26, 2022, 2:30 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் ஒற்றை இருக்கை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று இன்று பிற்பகலில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

பெத்தவூரா மண்டலத்தில் உள்ள ராமண்ணகுடம் தாண்டா என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. விமானம் தரையில் விழுந்தவுடன் பெரும் சத்தத்துடன் அப்பகுதியில் புகை எழுந்துள்ளது. இதனால், அச்சமடைந்த அப்பகுதியினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான பயிற்சி விமானம்

அவர்கள் அளித்த தகவலை அடுத்து காவல் துறையினர், வருவாய்த் துறையினர், மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்த பெண் விமானி தமிழ்நாட்டைச் சேர்ந்த மஹிமா என்றும், பயிற்சி விமானம் நகார்ஜூனாசாகரில் உள்ள விஜயபுரி தெற்கு விமான அகாதமியைச் சேர்ந்தது என்றும் நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

TRAINEE AIRCRAFT CRASHES IN TELANGANA TWO PILOTS KILLED
விமானி மஹிமா

மேலும், விபத்துக்குள்ளானது ஒரு இருக்கை கொண்ட விமானம் எனவும் தெரிவித்தார். நாகர்ஜூனாசாகரில் இருந்து ஹைதராபாத் நோக்கி இவ்விமானம் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. 133 கிலோ-வாட் உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானி மஹிமாவின் லைசன்ஸ்

இதையும் படிங்க: பசுவை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபர் கைது

Last Updated : Feb 26, 2022, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.