தாம்தரி : சத்தீஸ்கரில் கல்வியை பாதியில் கைவிட்ட காவலர்களுக்கு மத்தியில் பணிக்கு இடையிலும் தனது அயராத முயற்சியின் மூலம் 8 பட்டங்களை பெற்று போக்குவரத்து துணை காவல் கண்காணிப்பாளர் பலருக்கு ஊக்கமளித்து வருகிறார்.
சத்தீஸ்கர் மாநிலம் தாம்தரி மாவட்டத்தை சேர்ந்தவர் போக்குவரத்து துணை காவல் கண்காணிப்பாளர் மணி சங்கர் சந்திரா. கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் தனது பணிக்கு மத்தியிலும் அயராது உழைத்து இளங்கலை உள்ளிட்ட 8 பட்டப் படிப்புகளை முடித்து வியக்க வைத்து உள்ளார்.
இவரது ஊக்கத்தை கண்டு தாம்தரி மாவட்டத்தில் பல்வேறு காரணங்களால் பாதியில் கல்வியை விட்ட காவலர்கள் தங்களது கல்வியை மீண்டும் தொடர முன்வந்து உள்ளனர். அதில் காவலர் ஒருவர் ஏற்த்தாழ 13 ஆண்டுகள் தனது பணியை நிறைவு செய்த போதிலும் மீண்டும் இளங்கலை பட்டம் பெறுவதற்காக கல்வியை தொடர்ந்து வருகிறார்.
அதேபோல், மற்றொரு காவலர் ஏறத்தாழ 21 ஆண்டுகளுக்கு பின்னர் தனது பிஏ படிப்புக்கு விண்ணப்பித்து கல்வி கற்று வருகிறார். இவர்களை போன்று தாம்தரி மாவட்டத்தில் பல்வேறு காவலர்கள் தங்களது விடுபட்ட கல்வியை மீண்டும் தொடர முன்வந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் பலருக்கு முன் உதாரணமாக விளங்கிய போக்குவரத்து துணை காவல் கண்காணிப்பாளர் மணி சங்கர் சந்திரா தனது 9வது பட்டம் என்ற மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறார்.
இதையும் படிங்க : பூடான் பொதுத் தேர்தல்: மக்கள் ஜனநாயக கட்சி அபார வெற்றி! பொருளாதார நெருக்கடியை சமாளிக்குமா?