அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் சபர்மதி ஆற்று நீரில் கோவிட் வைரஸ் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பாக பீதி கொள்ள தேவையில்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஐஐடி விஞ்ஞானிகள் கூறுகையில், “சபர்மதி ஆறு, கன்ஹாரியா மற்றும் சந்தோலா ஏரிகளில் கோவிட் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த கோவிட் வைரஸ்கள் இறந்துபோய் காணப்படுகின்றன” என்றனர்.
இது தொடர்பாக காந்திநகரின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பூமி அறிவியல் துறையில் பணிபுரியும் விஞ்ஞானி மனிஷ்குமார் கூறுகையில், “கடந்தாண்டு டிசம்பர் மாதம் இது தொடர்பாக மரபணுக்களை சேகரித்தோம்.
இந்த மரபணுக்களை ஆர்டி-பிசிஆர் சோதனை செய்தபோது பாதிப்பு (பாசிட்டிவ்) இருப்பது தெரியவந்தது. எனினும் கவலைக்கொள்ள வேண்டாம். ஏனெனில் வைரஸ்கள் இறந்து காணப்படுகின்றன. ஆகவே இந்த நீரை நாம் பயன்படுத்தினாலும் பிரச்சினை இல்லை. உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின்படி நாங்கள் இதனை கண்காணித்தோம். வருங்காலத்தில் தொற்றுநோயை எதிர்த்து போராட இந்த ஆராய்ச்சிகள் பயன்படும்” என்றார்.
இதையும் படிங்க: கோவிட் தடுப்பூசி மைல்கல்: நயாகராவில் வாண வேடிக்கை