ETV Bharat / bharat

நிலச்சரிவு: பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு

இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.

Tourists killed
நிலச்சரிவு
author img

By

Published : Jul 25, 2021, 8:15 PM IST

இமச்சால பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சங்லா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று சிக்கிக்கொண்டது. மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு விழுந்ததில், டெம்போவில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், பாறைகள் விழுந்ததில் அங்கிருந்த பாலம் ஒன்று, தரைமட்டமானது.

பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததில் 11 பேர் உயிரிழப்பு

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலச்சரிவு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. குறிப்பாக சங்லா - சிட்குல் சாலையில் பட்சேரி அருகே பல நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. இன்னமும், பாறைகள் உருண்டு விழுவது தொடர்வதால், உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்

இதையும் படிங்க: துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் ஆசையில் உயிரைவிட்ட இளம்பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.