ETV Bharat / bharat

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 pm

author img

By

Published : Jun 20, 2021, 9:12 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

1. தமிழ்நாட்டில் 8000-க்குக் கீழ் குறைந்த கரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 7,817 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 17,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2. புதிய ஊரடங்குத் தளர்வுகள்: நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள்

புதிய ஊரடங்குத் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்றும்; காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. 'சீமானை கைது செய்ய வேண்டும்' - வீடியோ வெளியிட்ட நடிகை விஜயலெட்சுமி!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது துணை நடிகை கொடுத்தப் பாலியல் புகாரின் பேரில் இன்று (ஜுன் 20) கைது செய்யப்பட்டார். அதேபோல், தன்னுடைய புகாரின் பேரில் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என நடிகை விஜயலெட்சுமி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

4. மும்பை மேயரின் செயலை அங்கீகரித்த வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லண்டன்!

கோவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதில் காட்டிய விடாமுயற்சிக்காக மும்பை மேயர் கிஷோரி பெட்னேகரை , வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் லண்டன் நிறுவனம் பாராட்டியுள்ளது.

5. மேகேதாட்டு அணை: நாளை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள விவசாயிகள்

மேகேதாட்டு அணை கட்டுமானத்தை தடுக்காமல், மவுனம் காக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுவினர் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

6. கோப்ராவுக்கு முன் ரிலீஸாகும் ‘சியான் 60’

விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்துக்காக முதன் முதலில் இணைந்து பணியாற்றுகின்றனர்.

7. திஷா - டைகர் டேட்டிங்: ஜாக்கி ஷெராஃப் சொல்வதென்ன?

திஷாவும் டைகரும் மிக நல்ல நண்பர்கள். எதிர்காலத்தை பற்றி அவர்கள் என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

8. தனுஷின் தந்தையர் தின வாழ்த்து

ஜூன் 19ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியான தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ கடுமையான விமர்சனத்தையும் வரவேற்பையும் ஒருங்கே பெற்று வருகிறது.

9. தமிழ்நாட்டில் ஜூலையில் பள்ளிகள் திறப்பு?

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாமா என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

10. WTC FINAL: ஆல்-அவுட்டானது இந்தியா; நியூசிலாந்து நிதானம்

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டைகளையும் இழந்து 217 ரன்கள் எடுத்துள்ளது. அடுத்து, பேட்டிங் செய்த நியூசிலாந்து தேநீர் இடைவேளைக்கு முன்வரை விக்கெட் இழப்பின்றி 36 ரன்களை எடுத்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.