ETV Bharat / bharat

1 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 1 pm - முக ஸ்டாலின்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம்

1 மணி செய்தி சுருக்கம்
1 மணி செய்தி சுருக்கம்
author img

By

Published : Jun 9, 2021, 1:06 PM IST

1. பழங்குடியின மக்களின் கடவுள் 'பிர்சா முண்டா'!

பழங்குடியின மக்கள் கடவுளாகப் பார்க்கும் விடுதலைப் போராட்ட வீரன் பிர்சா முண்டாவின் 121ஆவது நினைவுநாள் இன்று.

2. ஆளுநரைச் சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜுன் 9) மாலை சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3. 12,520 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது - மக்கள் நல்வாழ்வு துறை

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட கரோனா தடுப்பூசிகளில் 12,520 தடுப்பூசிகள் மட்டுமே தற்போது கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

4. பிரதமர் மோடி தலைமையில் இன்று ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜுன்.9) கூடுகிறது.

5. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டி - பரபரப்பு

ஓ. பன்னீர்செல்வத்தை ஆலோசிக்காமல் முடிவெடுத்ததால் தான் தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும், இதேநிலை நீடித்தால் தலைமைக்கழகத்தை முற்றுகையிடுவோம் என நெல்லையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

6. சொக்க வைக்கும் சொர்ணக்கிளி சோனம் கபூருக்கு பிறந்தநாள்

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் 36ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, #HBDSONAMKAPOOR என்ற ஹேஷ் டேக்கை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

7. இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திரா பாண்டே நியமனம்!

புதிய இந்திய தேர்தல் ஆணையராக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அலுவலர் அனூப் சந்திரா பாண்டே (62) நேற்று (ஜூன் 8) நியமிக்கப்பட்டுள்ளார்.

8. எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஜுன் 11ல் காங்கிரஸ் நாடுதழுவிய போராட்டம்

எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து ஜுன் 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சி, எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்பாக நாடுதழுவிய போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

9. மேட்டூர் அணை திறப்பு: நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரம்!

மேட்டூர் அணை ஜுன் 12ஆம் தேதி திறக்கப்படுவதால், பாய் நாற்றாங்கால் அமைத்து இயந்திரம் மூலம் விவசாயிகள் நடவுப் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

10. நடிகர் சோனு சூட்டை காண 4000 கிலோ மீட்டர் நடந்து சென்ற சிறுவன்

நடிகர் சோனு சூட்டை காண தெலுங்கானா மாநிலத்தில் இருந்து அவரது ரசிகர் ஒருவர் எட்டு நாள்கள் நடந்தே மும்பைக்கு சென்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.