டெல்லி: ஒலிம்பிக்ஸ் 2020 போட்டி கடந்தாண்டு ஜூலை 24ஆம் தேதி டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் பரவிய கரோனா தொற்று பாதிப்பால், போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகள் வருகிற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் பங்கேற்க 190 பேர் கொண்ட வலுவான இந்தியா அணி தயார்ப்படுத்தபட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "பல ஆண்டுகளாக ஒலிம்பிக்கில் இந்தியாவை பெருமைப்படுத்திய அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது. அவர்களின் பங்களிப்பு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைகிறது. .
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இன்னும் சில வாரங்களில் தொடங்குகிறது. நமது விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்!