ETV Bharat / bharat

Lakhimpur Kheri case: விசாரணை செய்ய முன்னாள் பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனம்

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை, லக்கிம்பூர் வன்முறை சம்பவம் (Lakhimpur Kheri riot) குறித்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

லக்கிம்பூர்
லக்கிம்பூர்
author img

By

Published : Nov 17, 2021, 10:46 PM IST

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் ஜெயினை, லக்கிம்பூர் வன்முறை சம்பவம் (Lakhimpur Kheri violence) குறித்து விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

இதுகுறித்த உத்தரவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யா காந்த், ஹீமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், "விசாரணை எந்த ஒரு பாரபட்சமும் இன்றி சுதந்திரமாக நடைபெறுவதை ஜெயின் ஆணையம் உறுதி செய்யும். நீதிபதி ஜெயின் தலைமையில் இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளும். குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த பிறகு இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெறும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரோத்கர், தீபந்தர் சிங், பத்மஜா சவுகான் ஆகிய அலுவலர்களை நியமித்து சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினர்களை நீதிமன்றம் மாற்றியுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறை தலைவராக சவுகான் பொறுப்பு வகித்துவருகிறார்.

இதையும் படிங்க: TN and Puducherry News: அனுமதியின்றி இயங்கும் ஆட்டோக்களுக்குத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.