புதுச்சேரி, முத்து மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மருத்துவரின் வீட்டில் கடந்த மே மாதம் 26ஆம் தேதி அதிகாலை அடையாளம் தெரியாத நபர் திருட முயற்சித்துள்ளார்.
அப்போது வீட்டு ஜன்னலைத் திறந்து உள்ளே இருப்பவர்களை நோட்டமிட்டு போது, வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். கடந்த மாதம் ஒருநாள் நள்ளிரவு வீட்டிற்குள் இருந்த செல்போனை ஜன்னல் வழியே திருடிச் சென்றுள்ளார்.
மீண்டும் அதே வீட்டிற்கு ஜுலை 2ஆம் தேதி நள்ளிரவு சென்ற மர்மநபர், அங்கிருந்த செல்போன், லேப் டாப் ஆகியவற்றை திருடிச் சென்றார். இதுகுறித்து பெரிய கடை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருட்டு சம்பவங்கள் தொடர்ந்ததால் திகைத்த மருத்துவர் வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். இதனைத்தெரிந்து கொண்ட அந்த நபர் தனது சட்டையால் முகத்தை மறைந்து உள்ளே சென்று செல்போன், ஐபேட் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றான்.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது கூட்டாளி இருவருடன் பின்பக்கம் அமைந்துள்ள உணவகம் வழியாக நள்ளிரவு நுழைந்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு ஊழியர்கள் விரைந்து வர அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி நகைகளை வைத்து தங்க நகைககள் திருடிய பெண்கள் கைது