ETV Bharat / bharat

பழமைவாய்ந்த விஷ்ணு சிலையை கடத்த முயன்ற நபர் பெங்களூருவில் கைது - குற்றச் செய்திகள்

மலேசியாவுக்கு பழமைவாய்ந்த விஷ்ணு சிலையை கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

idol of lord Vishnu
idol of lord Vishnu
author img

By

Published : Mar 21, 2022, 8:42 AM IST

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில் பழங்கால விஷ்ணு சிலை கடத்த முயன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இந்த நபருக்கு 28 வயது எனவும் இவர் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிலை மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்தது. இச்சிலையின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் எனவும் அதன் எடை 22.5 கிலோ எனவும் காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. சுங்கத்துறைக்கு கிடைத்த ரகசிய துப்பின் பேரில் இந்த கடத்தல் சம்பவம் தடுக்கப்பட்டது.

கடத்தப்பட்ட சிலை இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், கைதான நபரிடம் கடத்தல் கும்பல் பின்னணி பற்றி தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: இன்று ராகு, கேது பெயர்ச்சி.. உங்க ராசிக்கு எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.