ETV Bharat / bharat

திருப்பதி தரிசனத்திற்கு சிக்கல்: 2 மாத காலத்திற்கு அலிபிரி பாதையை மூட முடிவு - அலிபிரி பாதையை மூட முடிவு

வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tirupati footpath  -TTD to close Alipiri footpath for two months

author img

By

Published : May 28, 2021, 7:38 PM IST

கரோனா பரவல் காரணமாக திருமலை கோயிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய மே 21ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு தொடங்குகிறது. இந்தச் சிறப்பு தரிசனத்திற்கு நாளொன்றுக்கு ஐந்தாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை திருப்பதி முதல் திருமலை வரையிலான அலிபிரி பாதை மூடப்படுவதாக தேவஸ்தான அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் அலிபிரி நடைபாதை வழியாகவும் நடந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக அலிபிரி நடைபாதையில் கூரை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், திருமலைக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு பாதை வழியாக செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் அலிபிரியிலிருந்து ஸ்ரீவாரி மெட்டுக்கு இலவச பேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்ல தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.