ஆந்திரா: ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டத்திலுள்ள டக்கிலியில் முதல் மனைவியின் அனுமதியுடன் இளம்கணவர் ஒருவர், அவரது டிக்டாக் காதலியை இரண்டாவதாக திருமணம் செய்த விநோதச் சம்பவம் நடந்துள்ளது.
டக்கிலி அம்பேத்கர் நகரைச்சேர்ந்த நபர் இளைஞர் ஒருவர் பல காலமாக டிக்டாக் செயலியில் பல வீடியோக்களை அப்லோடு செய்து வந்தார். இதனையடுத்து விசாகப்பட்டினத்தைச்சேர்ந்த ஒரு பெண் இவரது வீடியோவிற்கு டூயட் செய்துவந்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. ஒரு கட்டத்தில் டிக்டாக் செயலியின் தடையால் இருவருக்கும் இடையேயான பேச்சுவார்ததை நின்று போனது.
இதற்கிடையில் அந்த இளைஞருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. திடீரென முன்னாள் காதலியைச் சந்திக்க நேரிட்டபோது அப்பெண் அதிர்ச்சியடைந்தார். இருப்பினும், அந்நபரின் முதல் மனைவி இவர்களின் காதல் கதையால் மனம் உருகி, இருவரும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இவர்களது திருமணத்தை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் அந்த இளைஞரை முதலாவதாகத் திருமணம் செய்த பெண்ணின் பெருந்தன்மையைப் பாராட்டியும் வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆடை குறியீட்டை மீறியபெண் உயிரிழந்த விவகாரம்... வெடித்த வன்முறை... 9 பேர் உயிரிழப்பு