டெல்லி: தீபக் சர்மா என்பவர், டெல்லியில் உள்ள வினோத் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாடி பில்டிங்கில் இருந்த ஆர்வ மிகுதியால் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.
தனியார் சேனல் ஒன்றில் நடத்தப்பட் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க சென்றபோது, அங்கு வந்த ஒரு பெண்ணால் தீபக் சர்மா பல லட்சங்களை இழந்துள்ளார். தீபக் ஷர்மாவை ஹெல்த் சப்ளிமென்ட் தயாரிப்பில் முதலீடு செய்தால் அதன் பிராண்ட் அம்பாசிடர் ஆக்குவதாக கூறி ரூ.51 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
இது குறித்து தீபக் சர்மா கூறுகையில், “ கடந்த 2021ஆம் ஆண்டு ‘இந்தியாவின் அல்டிமேட் வாரியர்’ (India’s Ultimate Warrior) என்ற நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ரௌனக் குலியாவுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. பின்னர் 2022ஆம் ஆண்டு ரௌனக் குலியா நிறுவனத்தின் சப்ளிமெண்ட் பிராண்டின் வெளியீட்டு விழாவில் ரெளவுனக்கின் கணவர் அங்கித்தை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்னர், அவர்கள் என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டனர்.
இதையும் படிங்க: பாலியல் தொழிலுக்காக பங்களாதேஷ் சிறுமி கடத்தல்? - ஒரு பெண் உள்பட மூவர் கைது
கடந்த பிப்ரவரியில் எனக்கு பணம் தருவதாக கூறினார்கள். ஆனால், எனக்கு ரூ.51 லட்சம் பணம் வரவில்லை. ரவுனக் குலியா மற்றும் அங்கித் குலியா ஆகிய இரண்டு நபர்களும் என்னை ஏமாற்றினர். இதனையடுத்து, இந்த பண மோசடி குறித்து மதுவிஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். ஐபிசி பிரிவு 420ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹரியானாவில் உள்ள ரோஹ்தக் சைபர் கிரைமில் இருவர் மீது 5 கோடி ரூபாய் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த விவகாரத்தில் அவர்களது முன்ஜாமீனும் நிராகரிக்கப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர்” என கூறினார்.
இதையும் படிங்க: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சதி தொடர்பாக இருவர் கைது!